லண்டன்: கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவ காரணமாக இருந்த சீனாவிடம் இழப்பீடு கேட்டு சர்வதேச நீதிபதிகள் கவுன்சில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலை அணுகி உள்ளது.
இது குறித்து சர்வதேச நீதிபதிகள் கவுன்சில் கூறுகையில் ' கொரோனாவை உலக அளவில் பரப்ப காரணமாக இருந்த சீனா உலக அளவில் மக்களிடையே மன அழுத்தத்தையும் சமூக பாதிப்பையும், உலக பொருளாதாரத்தையும் வெகுவாக பாதிப்பு அடைய செய்துள்ளது. இது தொடர்பாக சீனா உலக நாடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.உயிரியல் ஆயுதமாக கொரோனாவை உருவாக்கியதன் மூலம் சீனா சர்வதேச மனித உரிமை கவுன்சிலின் விதிமுறைகளை மீறி உள்ளது.' இவ்வாறு கூறியுள்ளது.