தமிழகத்தில் 35 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மதுரை, ஈரோடு, சென்னையை சேர்ந்த தலா இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவரின் குடும்பத்தை சேர்ந்த இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவருக்கும், அரியலூரில் சிகிச்சை பெற்று வரும் 25 வயதான பெண்ணுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.