அமெரிக்கப் படைகள் விரைவில் அங்கிருந்து புறப்படும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த சூழலில், ஈரான் தாக்குதல் நடத்தியது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் ஈரான் நேரப்படி நள்ளிரவு 1: 30க்கு நடத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈராக் டிவி சேணல்கள் கூறுகையில், “நாட்டை விட்டு விரைவில் கிளம்பவில்லை என்றால், அமெரிக்கர்களின் பலி எண்ணிக்கை அதிகரிக்கும்” எனக் கூறி வருகிறது. இந்த தாக்குதல் குறித்து இப்போதுவரை அமெரிக்க ராணுவ தலைமையான பெண்டகன் எந்தவொரு அறிக்கையும் வெளியிடவில்லை.
இந்த தாக்குதலுக்கு முன் அமெரிக்கத் தரப்பு பத்திரிகைகளுக்குப் பேட்டி அளிக்கும்போது, “ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படையினர் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கான அனைத்து நடவடிக்கையும் செய்யப்பட்டுவிட்டது” எனக் கூறியிருந்தது.
அமெரிக்கப் படைகள் விரைவில் அங்கிருந்து புறப்படும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த சூழலில்