காசிம் சுலைமானி உடலின் இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான ஈரான் மக்கள் பங்கேற்றிருந்தனர். பலர் கதறி அழுதனர். காசிம் கொல்லப்பட்டதற்கு அமெரிக்க நிச்சயம் உரியப் பதிலடியைப் பெறும் என அந்த கூட்டமே சூளுரைத்தது.
இந்நிலையில் ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் மத்திய கிழக்குப் பகுதியில் போர் உருவாகும் சூழலை ஏற்படுத்தியுள்ளது என அஞ்சப்படுகிறது.
ஈரான் மக்களின் நம்பிக்கை நாயகனாக வலம்வந்த காசிம் சுலைமானியை அமெரிக்கா