முகநூலில் ரெக்வெஸ்ட் வந்துச்சி அக்சப்ட் பண்ணேன்... 35 லட்சம் அபேஸ்..! உஷார் மக்களே...

ஆந்திரா: விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் குமார் தாஸ். இவருக்கு முகநூலில் பெண் பெயரை கொண்ட கணக்கிலிருந்து ஃப்ரண்ட் ரெக்வெஸ்ட் வந்துள்ளது. அதை அங்கீகரித்ததையடுத்து இருவரும் மெசேஞ்சரில் பேச தொடங்கியுள்ளனர்.


இந்நிலையில் குமார் தாஸை தொடர்பு கொண்ட அந்த பெண், பணி ஓய்வு பெற்ற உங்களை கௌரவிக்கும் விதமாக பரிசளிக்க விரும்புகிறேன். அதனால் மின்னணு வீட்டு உபயோகப் பொருட்கள், சி்று ஆபரணங்கள், 25 ஆயிரம் பவுண்ட்ஸ் பணம் ஆகியவற்றை பார்சலில் அனுப்பி வைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில் மற்றொரு பெண் தன்னை சுங்கத்துறை அதிகாரி என்றும், உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் நானும் இருக்கிறேன் என்றும் அறிமுகம் செய்துகொண்டார். அந்த பெண்ணிடமும் குமார் தாஸ் தன்னுடைய செல்போன் எண்ணை பகிர்ந்துள்ளார்.