தோனிக்கு மரியாதை.. கோலிக்கு ஆதரவு.. யோசிக்காமல் பரபர பதில் சொன்ன தலைவர் கங்குலி


மும்பை : பிசிசிஐ தலைவராக அதிகாரப் பூர்வமாக பதவியேற்ற கங்குலி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது தோனி, விராட் கோலி உள்ளிட்டோர் குறித்த கேள்விகளுக்கு யோசிக்காமல் பதில் அளித்தார்.


பிசிசிஐ அமைப்பு கடந்த மூன்று ஆண்டுகளாக நிர்வாக கமிட்டியால் மட்டுமே இயங்கி வந்த நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின் சரியான முறையில் தலைவர், செயலாளர் என அமைப்பு ரீதியாக செயல்பட உள்ளது.



சவால்கள், சிக்கல்கள்


பிசிசிஐ மீது இருந்த பழைய கறைகளை துடைத்து புதிய பாதையில் வழிநடத்தும் பணியை ஏற்றுக் கொண்டுள்ளார் கங்குலி. முதல் நாள் தொடங்கி அவருக்கு பல்வேறு சவால்கள், சிக்கல்கள் காத்துக் கொண்டு இருக்கிறது.