பிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்காதது ஏன்? அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்

 





பிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்காதது ஏன்? அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்!!


அரசு அனுமதியின்றி சிறப்புக் காட்சிகளை திரையரங்குகள் திரையிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியிருந்தார்.







 





 


தீபாவளிக்கு வெளியாகும் எந்த திரைப்படத்திற்கும் சிறப்புக்காட்சிக்கு அனுமதி கொடுக்கவில்லை






அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்வதாக புகார் எழுந்ததன் காரணமாகவே சிறப்புக் காட்சிகளுக்கு அரசு அனுமதி கொடுக்கவில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.


பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடிகர் விஜய் நடித்துள்ள பிகில், நடிகர் கார்த்தி நடித்திருக்கும் கைதி உள்ளிட்ட திரைப்படங்கள் தீபாவளியை முன்னிட்டு 25-ம் தேதி திரைக்கு வருகின்றன. 


இதையொட்டி பெரும்பான்மையான திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 2 மணி, 4 மணி என ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு நேரங்களில் ரசிகர்கள் சிறப்புக்காட்சிகளுக்கு திரையரங்குள் ஏற்பாடு செய்திருந்தது.